போற்றிடு ஆன்மமே சிருஷ்டி
432. Lobe den Herren 14,
14, 4, 7, 8.
"Praise to the Lord the Almighty"
1. போற்றிடு ஆன்மமே சிருஷ்டி
கர்த்தாவாம்
வல்லோரை
ஏற்றிடு
உனக்கு இரட்சிப்பு
சுகமானோரை;
கூடிடுவோம்
பாடிடுவோம்
பரனை
மாண்பாய்
சபையாரெல்லோரும்.
2. போற்றிடு
யாவையும் ஞானமாய்
ஆளும் பிரானை;
ஆற்றலாய்க்
காப்பரே தம் செட்டை
மறைவில்
நம்மை; ஈந்திடுவார்
ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்;
யாவும்
அவர் அருள் ஈவாம்.
3. போற்றிடு
காத்துனை
ஆசீர்வதிக்கும்
பிரானை;
தேற்றியே
தயவால் நிரப்புவார் உன்
வாணாளை;
பேரன்பராம்
பராபரன்
தயவை
சிந்திப்பாய்
இப்போதெப் போதும்.
4.
போற்றிடு ஆன்மமே, என் முழு
உள்ளமே
நீயும்;
ஏற்றிடும்
கர்த்தரை ஜீவ இராசிகள்
யாவும்
சபையாரே,
சேர்ந்தென்றும்
சொல்லுவீரே
வணங்கி
மகிழ்வாய் ஆமேன்.
Comments
Post a Comment