அருள் ஏராளமாய் பெய்யும்


394. S.S.306

"There shall be showers of blessing"

1.         'அருள் ஏராளமாய் பெய்யும்'
            உறுதி வாக்கிதுவே;
            ஆறுதல் தேறுதல் செய்யும்
            திரளாம் மிகுதியே.

                        அருள் ஏராளம்
                        அருள் அவசியமே;
                        அற்பமாய்ச் சொற்பமாயல்ல
                        திரளாய்ப் பெய்யட்டுமே

2.         'அருள் ஏராளமாய்ப் பெய்யும்'
            மேக மந்தாரமுண்டாம்
            காடான நிலத்திலேயும்
            செழிப்பும் பூரிப்புமாம்

3.         'அருள் ஏராளமாயப் பெய்யும்'
            பொழியும் இச்சணமே
            அருளின் மாரியைத் தாரும்
            ஜீவ தயாபரரே.

4.         'அருள் ஏராளமாய் பெய்யும்'
            இயேசு! வந்தருளுமேன்!
            இங்குள்ள கூட்டத்திலேயும்
            இறங்கி தங்கிடுமேன்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே