சீர்பெறாமல் திக்கில்லாமல்
404. S.S. 481
"Lone and weary, sad and dreary"
1. சீர்பெறாமல்;
திக்கில்லாமல்,
யேசுவண்டை சேருவேன்,
ஆவலோடும் ஆசையோடும்
திருப்பாதம் அண்டுவேன்.
அண்டினேனே! அண்டினேனே!
ஆசீர்வாதம் தாருமேன்,
அண்டினேனே அண்டினேனே
ஆற்றித் தேற்றிக் காருமேன்
2. தயவாக - நேசமாக
சீரைத் தந்து ரட்சிப்பீர்,
பாவத் தீங்கும் தூர நீங்கும்,
சர்வ சுத்தியாக்குவீர்.
3. குணம் மாற - நெஞ்சம் ஆற
பரவசமாகுவேன்;
கரையேற, மோட்சஞ் சேர,
ஊழிகாலம் வாழுவேன்.
4. அருள்தாரும் - பாதுகாரும்
மறு மாசில்லாமலே,
வாழ்விலேயும் தாழ்விலேயும்
தாங்கிவாரும் நாயனே!
Comments
Post a Comment