03 November 2018

எந்நேரம் இயேசுவே


406. S.S.577

"I need Thee ev'ry hour"

1.        எந்நேரம், யேசுவே!
                      சகாயராயிரும்,
            அன்பான சத்தத்தால்
                        என் ஏக்கம் நீக்கிடும்.

            எந்நேரம் நீரே வேண்டும்;
                        இந்நேரம் நீரே வேண்டும்;
            நீர் என்னை நோக்கிப்பாரும்
                        பேரன்பரே!

2.         எப்போதும், யேசுவே!
                        இப்பாவியோடிரும்,
            தீயோனின் சோதனை
                        ஓயாமல் விலக்கும்.

3.         எக்காலும் யேசுவே!
                        இக்கட்டு வாழ்விலும்,
            அன்பாகத் தங்குவீர்
                        என் நீச நெஞ்சிலும்.

4.         எப்போதும் யேசுவே!
                        இப்பேதைக் கிரங்கும்
            மெஞ்ஞானம், சத்தியம்
                        செய்நன்றி போதியும்.

5.         எக்காலும், யேசுவே!
                        எக்கேடும் நீக்குமேன்,
            காருண்ய நாயகா
                        நீர் என்னை ஆளுமேன்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...