தயாள இயேசு தேவரீர்


335. St. Drostane. 

Winchester New                                              L.M.

"Ride on ride on in majesty"

1.         தயாள இயேசு, தேவரீர்
            மாண்பாய்ப் பவனி போகிறீர்;
            வெள்ளோலை தூவிக் கூட்டத்தார்
            ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார்.

2.         தாழ்வாய் மரிக்க, தேவரீர்
            மாண்பாய்ப் பவனி போகிறீர்!
            மரணம் வெல்லும் வீரரே,
            உம் வெற்றி தோன்றுகின்றதே.

3.         விண்ணோர்கள் நோக்க, தேவரீர்
            மாண்பாய்ப் பவனி போகிறீர்!
            வியப்புற்றே அம் மோக்ஷத்தார்
            அடுக்கும் பலி பார்க்கிறார்.

4.         வெம் போர் முடிக்க, தேவரீர்
            மாண்பாய்ப் பவனி போகிறீர்!
            தம் ஆசனத்தில் ராயனார்
            சுதனை எதிர்பார்க்கிறார்.

5.         தாழ்வாய் மரிக்க, தேவரீர்
            மாண்பாய்ப் பவனி போகிறீர்!
            நோ தாங்கத் தலை சாயுமே
            பின் மேன்மை பெற்று ஆளுமே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே