03 November 2018

பால்ய வீரர் வாரும்


433. S.S.706

"Onward Christian soldiers"

1.         பால்ய வீரர், வாரும்
                      பாவம் வெறுத்தே,
            திட்டி வாசல் சேரும்
                        உட்சென்றிடவே;
            தட்டுவோருக்கெல்லாம்
                        வாசல்திறக்கும்,
            யேசு வாழ்த்திச் சேர்ப்பார்
                        தேடும் யாரையும்!
            பால்ய வீரர், வாரும்
                        முன்னே செல்லுவோம்;
            விரைந்தோடி வாரும்,
                        வெற்றி சிறப்போம்.

2.         பால்ய வீரர், வாரும்,
                        வெற்றிக் கீதமும்
            பாடும் விண்ணோரோடும்
                        சேரும் அளவும்;
            மோக்ஷ வீட்டில் கூடி
                        இன்பத் தொனியாய்,
            தூயர், தூயர், தூயர்!
                        என்போம் ஏகமாய்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...