என் மேய்ப்பரே நல்நேசரே
387. G.B.421
1. என் மேய்ப்பரே
நல்நேசரே!
எனதுள்ளத்தின்
சந்தோஷமே!
நான் உம்மை சமீபிக்கிறேன்
நீர் என்மேல் க்ருபையாயிரும்.
பேசும்! பேசும்! ஜெபம் செய்யும்போது
மீட்பரே! உமது சித்தத்தை
அடியேன் காண க்ருபை செய்யும்.
2. பாவ மேகத்தின் அந்தகாரம்
பாவி உள்ளத்தை மறைக்குதையோ
வல்லவா! உந்தன் ஆவியாலே
அதை வெல்லக்ருபை செய்யாயோ.
3. அங்குமிங்கும் ஓடுதே உள்ளம்
எங்கும் நிற்கப் பெலன் இல்லையே
அப்பனே! உந்தன் சத்யநெறி
இப்போ தேழைக்குப் பெலனாகவே.
Comments
Post a Comment