03 November 2018

மெய்யாம் வாசஸ்தலமுண்டே


427. S.S.427

"Oh, think of the home over there"

1.         மெய்யாம் வாசஸ்தலமுண்டே
            ஜீவ நதியின் ஓரத்திலாம்;
            மோட்ச வாசிகளானவரே
            பரிசுத்த சம்பூரணராம்.

                        அங்குதான் - அங்குதான்
                        மெய்யாம் வாசஸ்தலமுண்டே.

2.         என் பிரிய சிநேகிதரும்
            அந்த ஸ்தலத்தில் சென்றிருப்பார்
            பரஞ்சோதி சமூகத்திலும்
            சுகவாழ்வையும் பெற்றிருப்பார்.

3.         என் அருமை ரக்ஷகரும்
            பரலோகத்தின் சூரியனாம்,
            அந்த வீட்டில் நான் சேர்ந்திடவும்
            நீங்கிப்போகும் விசாரமெல்லாம்.

4.         சேர்வேன் அதி சீக்கிரமே
            மோக்ஷலோகத்தில் ஆனந்திப்பேன்
            ஜீவ நதியின் ஓரத்திலே
            என் மீட்பரை ஸ்தோத்தரிப்பேன்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...