செல்வோம் யாம் கோயிலுக்கு


367. Spanish Chant                  7s, 8l.

1.         செல்வோம் யாம் கோயிலுக்கு
            ஓய்வுநாட்கள் தோறுமே;
            துதி செய்வோம் யாம் நன்றாய்
            ஓய்வுநாட்கள் தோறுமே;
            பாரும் நேச தெய்வமே!
            எங்கள் நெஞ்சம் ஆற்றுமே,
            ஓய்வுநாட்கள் தோறுமே.

2.         வேலையை யாம் விடுவோம்
            ஓய்வுநாட்கள் தோறுமே;
            உம்மையே யாம் வாழ்த்துவோம்
            ஓய்வுநாட்கள் தோறுமே;
            ஆபாசம் நீர் நீக்குவீர்,
            உமதருள் ஊற்றுவீர்
            ஓய்வுநாட்கள் தோறுமே.

3.         தேவ வாக்கை யாம் கேட்போம்
            ஓய்வுநாட்கள் தோறுமே
            அதை சித்தியாக்குமே
            ஓய்வு நாட்கள் தோறுமே;
            போகும் இடம் தங்குவீர்
            ஆசீர்வாதம் தருவீர்
            ஓய்வுநாட்கள் தோறுமே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு