03 November 2018

தீர்த்தப் பாவக் கூரொடித்துச்


413. S.A.95

1.         தீர்த்தப் பாவக் கூரொடித்துச்
            சிறையை மீட்கிறார்
            இரத்தத்தினால் பாவம் தீர்த்து
            யேசு ஜீவன் தாரார்.

                        மாமகத்துவ ஊற்று,
                        மாமகத்துவ ஊற்று,
                        மாமகத்துவ ஊற்று,
                        எனக்காய்ப் பாயுது,

2.         என்னையாளும் பாவத்தை நீர்
            நிர்மூல மாக்குவீர்,
            காயத்தினில் பாயும் செந்நீர்
            வல்லமை காட்டுமேன்.

3.         ஆத்மம் தேகம் மற்றுமெல்லாம்
            மெய்யாய்ப் படைக்கிறேன்;
            இம்மை செல்வம் அற்பப் புல்லாம்
            உம்மைப் பெற வந்தேன்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...