தட்டித் தட்டி நிற்கிறார்
409. S.S.422
"Knocking knocking who is there?"
1. தட்டித்
தட்டி நிற்கிறார்
காத்துக் கொண்டிருக்கிறார்,
பரதேசிபோல வந்தும்
ராஜனாய் இருக்கிறார்
உள்ளமே, இவ்வன்புணர்ந்து
கதவைத் திறக்கப்பார்!
2. தட்டித் தட்டி நிற்கிறார்
காத்துக் கொண்டிருக்கிறார்,
நிலையோரம் புல் முளைத்து,
கீலும் துருப்பட்டது
கதவசையாமல் தங்கி
திறவாமற் போயிற்று!
3. தட்டித் தட்டி நிற்கிறார்
காத்துக் கொண்டிருக்கிறார்;
சூட்டப்பட்ட சிரசுள்ளார்!
காயப்பட்ட கைகள் பார்!
நேசப் பார்வையுற்ற மீட்பர்
இன்னும் காத்து நிற்கிறார்!
4. உள்ளே வாரும் யேசுவே!
எந்தன் நெஞ்சில் தங்குமே,
திவ்ய அன்பை உணராமல்,
முன்னே வாசல் பூட்டினேன்,
இப்போதே! என் நேசநாதா!
உள்ளே வாரும்! வாருமேன்!
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக..
ReplyDeleteஆமென்!
Delete