அருவிகள் ஆயிரமாய்


341. Assisi, Misericordia                 8, 8, 8, 6.

"His are the thousand sparkling rills"

          தாகமாயிருக்கிறேன்.

1.         அருவிகள் ஆயிரமாய்
            பாய்ந்து இலங்கிடச் செய்வார்,
            அனைத்தும் ஆள்வோர், 'தாகமாய்
                        இருக்கிறேன்' என்றார்.

2.         வெம்போரில் சாவோர் வேதனை,
            வியாதியஸ்தர் காய்ச்சலும்,
            குருசில் கூறும் இவ்வொரே
                        ஓலத்தில் அடங்கும்.

3.         அகோரமான நோவிலும்,
            மானிடர் ஆத்துமாக்களை
            வாஞ்சிக்கும் தாகம் முக்கியம்;
                        என் ஆன்மாவும் ஒன்றே.

4.         அந்நா வறட்சி, தாகமும்
            என்னால் உற்றீர், பேர் அன்பரே;
            என் ஆன்மா உம்மை முற்றிலும்
                        வாஞ்சிக்கச் செய்யுமே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே