03 November 2018

அவிசுவாசத்தில் துவைந்து

ஞாபா:371

To Download Txt Lyrics file

 

371.

 

1.       அவிசுவாசத்தில் துவைந்து

          ஆபத்தில் ஏன் நிற்கிறாய்?

            நம்பேன் இப்போ, இரட்சிப்பார் அப்போ,

            மனதைத் தா நம்பிக்கையாய்

            இரட்சிக்க வல்லவர் யேசு,

            மீட்கவல்லோர், காக்கவல்லோர்
            பாவியை மீட்க வல்லோர்.

 

2.         ஏழைப் பலவீனன் ஐயோ!

            பாவத்தை வெல்லேன் என்றாய்;

            மெய்தான்; ஆனால் அவரைச் சேர்ந்தால்

            மீட்டுன்னைப் பாதுகாப்பார்.

 

3.         இவர் என்னைத் துக்கத்தில் கண்ட

            அன்பாக சொஸ்தம் செய்தார்

            இருள்நீக்கி, இவர் என்னைத் தூக்கி

            மெய் வெளிச்சத்தைத் தந்தார்.

 

4.         துக்கங்கள், துன்பங்கள் வந்து,

            சோதனை என்னைச் சூழ்ந்தால்,

            என்றும் இவர் தாங்குவார் என்னை;

            எந்தனுக் கேது பயம்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...