03 November 2018

பேரன்பர் யேசு நிற்கிறார்


408. S.S.89

"The great physician now is near"

1.         பேரன்பர் யேசு நிற்கிறார்
            நாம் அண்டிக்கொள்வோமே
            கடாட்சமாகப் பார்க்கிறார்
            நல் நாமம் போற்றுவோமே

            விண்ணில் மேன்மை பெற்றது
            மண்ணோக்கின்பமாவதது;
            பாடிப்போற்றும் நாமமது;
            யேசு என்னும் ஆ! நாமம்.

2.         ரட்சண்ய வல்ல நாமத்தால்
            விசாரம் நீங்கிப் போகும்,
            அவ்வின்ப நாமம் கேட்பதால்
            சந்தோஷமும் உண்டாகும்.

3.         நல் மீட்பர் யாவர் பேரிலும்
            கடாட்சம் வைக்கிறாரே,
            தம்மண்டை சிறியோரையும்
            தள்ளாமல் சேர்க்கிறாரே.

4.         ஆனந்தமாகப் பாடுவோம்
            பேராவலோடு வாரும்
            ஏகோபித்தார வாரிப்போம்,
            மெய்ப்பக்தர் தாசர் யாரும்.

5.         பேரின்ப மோட்ச லோகத்தில்
            மாண்பாகக் கூடுவோமே,
            ரட்சண்ய நாதர் பாதத்தில்
            சாஷ்டாங்கம் பண்ணுவோமே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...