03 November 2018

அன்போடு எம்மைப் போஷிக்கும்

ஞாபா:350

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

350. Martydom                                                                                   C.M.

 

"O God of Bethel by whose Hand"

 

1.       அன்போடு எம்மைப் போஷிக்கும்

                        பெத்தேலின் தெய்வமே;

            முன்னோரையும் நடத்தினீர்

                        கஷ்டம் இவ்வாழ்விலே.

 

2.         கிருபாசனமுன் படைப்போம்

                        எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;

            தலைமுறையாய்த் தேவரீர்

                        எம் தெய்வமாயிரும்.

 

3.         மயங்கும் ஜீவ பாதையில்

                        மெய்ப்பாதை காட்டிடும்;

            அன்றன்றுமே நீர் தருவீர்

                        ஆகாரம் வஸ்திரமும்.

 

4.         இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,

                        பிதாவின் வீட்டினில்

            சேர்ந்திளைப் பாறுமளவும்

                        காப்பீர் உம் மறைவில்.

 

5.         இவ்வாறான பேர் நன்மைக்காய்

                        பணிந்து கெஞ்சினோம்;

            நீர் தாம் எம் தெய்வம் என்றுமே,

                        சுதந்தரமுமாம்.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...