கர்த்தாவே இரங்கும்


395. S.S.309

"Revive thy work O Lord"

1.         கர்த்தாவே! இரங்கும்!
            ப்ரசன்னமாகுவேன்;
            மெய் பக்தர் நெஞ்சில் இப்போதும்
            வந்தனல் மூட்டுமேன்

                        கர்த்தாவே! இரங்கும்!
                        நற்சீரைத் தாருமேன்,
                        மா வல்ல க்ரியை செய்யவும்
                        இந்நேரம் வாருமேன்;

2.         கர்த்தாவே! இரங்கும்!
            நல்மீட்பர் நாமமும்
            மா சுடர்போல் ப்ரகாசிக்க
            பேரன்பைக் காட்டவும்

3.         கர்த்தாவே! இரங்கும்!
            பேர் நன்மை செய்யுமே
            விண்மாரி பெய்ய, மேன்மையும்
            உண்டாகும் உமக்கே

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே