சிலுவையைப் பற்றி நின்று
339. Stabat Mater. 8,
8, 7, D.
"At the Cross Her station
keeping"
அம்மா,
அதோ, உன் மகன்...
அதோ, உன் தாய்.
1. சிலுவையைப்
பற்றி நின்று
துஞ்சும் மகனைக் கண்ணுற்று,
விம்மிப் பொங்கினார் ஈன்றாள்;
தெய்வ மாதா மயங்கினார்;
சஞ்சலத்தால் கலங்கினார்;
பாய்ந்ததாத்துமாவில் வாள்.
2. பாக்கியவதி மாதா உற்றார்
சிலுவையை நோக்கிப் பார்த்தார்,
அந்தோ, என்ன வேதனை;
ஏக புத்திரனிழந்து,
துக்க சாகரத்தில் ஆழ்ந்து,
சோகமுற்றனர் அன்னை.
3. இணையிலா இடருற்ற
அன்னை அருந்துயருற
யாவரும் உருகாரோ?
தெய்வ மைந்தன் தாயார் இந்த
துக்க பாத்திரம் அருந்த,
மாதாவோடழார் யாரோ?
4. தம் குமாரன் காயப்பட,
முள்ளால் கிரீடம் சூட்டப்பட,
இந்த நிந்தை நோக்கினார்;
நீதியற்ற தீர்ப்புப் பெற
அன்பர், சீஷர் கைவிட்டோட
அவர் சாகவும் கண்டார்.
5. அன்பின் ஊற்றாம், இயேசுஸ்வாமி,
உமதன்னைக்குள்ள பக்தி
என்தன் நெஞ்சில் ஊற்றிடும்;
அன்பினால் என் உள்ளம் பொங்க;
அனல் கொண்டகம் உருக
அருளைக் கடாட்சியும்.
Comments
Post a Comment