செய் என்று சிற்றாறு


434.

1.         செய், என்று சிற்றாறு,
            செய், நீ செய், தர்மஞ் செய்;
            செய், என்று சிற்றாறு
                        இரையும் சத்தம் நீ கேள்;
            சிறு ஆறாம் என் செயல் நீ பாரு
            செய், நீ செய், தர்மஞ்செய்
            சிறு ஆறாம் என் செயல் நீ பாரு
            செழிப்பிப்பேன் நாடுகள்.

                        பாடிப்பாடி நாளெல்லாம்
                        செவ்வையாம்; நீ செவ்வையாம்
                        பாடிப்பாடி நாளெல்லாம்
                        தர்மஞ் செய்வையாம்.

2.         செய், என்று மல்லிகை
            செய், நீ செய், தர்மஞ் செய்
            செய், என்று மல்லிகை
                        வீசும் வாசம் நீ பார்;
            விருப்பங்கொள்வார் முகர என்னை
            செய், நீ செய், தர்மஞ் செய்
            விருப்பங்கொள்வார் முகர என்னை
            மணம் என்பாரே மலர்.

3.         செய், யேசுவுக்காகச் செய்,
            செய், நீ செய், தர்மஞ்செய்,
            செய், யேசுவுக்காகச் செய்
                        எவரென்றாலும் நீ செய்
            ஜலம் புஷ்பம்போல களிப்பாய் நீ செய்;
            செய், நீ செய், தர்மஞ் செய்;
            ஜலம், புஷ்பம் போல் களிப்பாய் நீ செய்;
            கிறிஸ்துவின் நிமித்தம் செய்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு