03 November 2018

வீர தீரமாய் நேரும் சீருமாய்


425. S.S.703

"Sound the battle cry"

1.         வீர தீரமாய் நேரும் சீருமாய்
            நின்று ஏகமாய்போர் செய்வோம்;
            பயமின்றியும் பின்வாங்காமலும்,
            கீதம் பாடியும் முன் செல்லுவோம்.

                        சோம்பும் சோர்வும் நீக்கி-வீரராக
                        யாரும் வாரும், யுத்தம் பண்ணுவோம்,
                        செல்லும் வெல்லும் ஆரவாரமாக
                        யேசு நாதர் நம்பிப் போகிறோம்

2.         கொடி ஏற்றுவோம், காளம் ஊதுவோம்;
            வாளும் வீசுவோம்; போர்கோலமாய்
            கர்த்தர் தாங்குவார்; கூடப்போகிறார்,
            வெற்றி சிறப்பார் கெம்பீரமாய்.

3.         சேனைக்கர்த்தரே! யேசு நாதரே!
            தேவரீரையே துதிப்போம்;
            உம்மால் வல்லமை! உம்மால் மகிமை
            உம்மால் வெற்றியை கண்டடைவோம்.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...