03 November 2018

கரையேறி உமதண்டை


420. S.S.789                                     8, 7

"Must I go and empty handed."

1.         கரையேறி, உமதண்டை
            நிற்கும் போது ரக்ஷகா!
            உதவாமல், பலனற்று,
            வெட்கப்பட்டுப் போவேனோ?

                                    ஆத்மா ஒன்றும் ரக்ஷிக்காமல்
                                    வெட்கத்தோடே ஆண்டவா,
                                    வெறுங்கையனாக, உம்மைக்
                                    கண்டுகொள்ளல் ஆகுமா?

2.         ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
            வைத்திராமல் சோம்பலாய்
            காலங்கழித்தோர் அந்நாளில்
            துக்கிப்பார் நீர்ப்பந்தராய்.

3.         தேவரீர் கைதாங்கச் சற்றும்
            சாவுக்கஞ்சி கலங்கேன்,
            ஆயினும் நான் பலன் காண
            உடைக்காமற் போனேனே.

4.         வாணாள் எல்லாம் வீணாளாகச்
            சென்று போயிற்றே! ஐயோ!
            மோசம் போனேன்! விட்டநன்மை
            அழுதாலும் வருமோ?

5.         பக்தரே! உற்சாகத்தோடு
            எழும்பிப் ப்ரகாசிப்பீர்!
            ஆத்துமாக்கள் யேசுவண்டை
            வந்துசேர உழைப்பீர்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...