ஜீவ ஒளியிற் போகிறேன்


414.

1.         ஜீவ ஒளியிற் போகிறேன்
            போகிறேன், நான் போகிறேன்;
            மீட்பர் நடந்த பாதையில்
            போகிறேன், நான் போகிறேன்.

                        ஓர் வெண்ணங்கி, ஓர் பொன்முடி
                        ஓர் வாத்தியம், ஓர் மேல்வீடு
                        ஓர் செயக்கொடி, ஓயா வின்பம்
                        எனக்குண்டு மோட்சத்தில்,
                        யேசு என் ரட்சகர்,
                        பாவந் தீர்த்தார்;
                        கல்வாரி மலையிலென் கடன் தீர்த்தார்

            அவரன்பில் நான் மூழ்கி
            என்றும் பாடுவேன்;
            மகிழ்வேன் ஜீவ ஊற்றில்
                        வாழ்வேன்.

2.         பாவிகள் நடுவில் போகிறேன்
            போகிறேன், நான் போகிறேன்;
            மீட்பர் பின் சென்றால் ஜெயமுண்டு
            போகிறேன், நான் போகிறேன்.

3.         வீண் பக்திக்காரர் நகைத்தாலும்
            போகிறேன், நான் போகிறேன்;
            பூரண அன்பு பயம் நீக்கும்,
            போகிறேன், நான் போகிறேன்.

4.         சிலுவைகொடியுடன் போகிறேன்
            போகிறேன், நான் போகிறேன்;
            மீட்பரின் நேசத்தைக் காட்ட நான்
            போகிறேன், நான் போகிறேன்.

5.         பரிசுத்தாவியால் நிறைந்து,
            போகிறேன், நான் போகிறேன்;
            மோட்சம் சேருமட்டும் நிலைத்து,
            போகிறேன், நான் போகிறேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு