03 November 2018

இரட்சகரொருவர் அன்பு


410. S.A.

"When Jesus was born in the Manger"

1.         இரட்சகரொருவர் அன்பு,
            பேரன்பென்று கேள்விப்பட்டேன்,
            ஆனால் மெய்தானா மோட்சம்விட்டு
            என்னை மீட்க மனிதனானார்?

            ஆம்! ஆம்! ஆம்!
            என்னை நேசித்ததாலே தானே;
            ஆம்! ஆம்! ஆம்!
            என் மேல் க்ருபை கூறுகிறார்.

2.         அவர் பாடும் அனுபவமும்
            அதிகமாய்க் கேள்விப்பட்டேன்!
            ஆனால் மெய்தானா யிவை எல்லாம்
            பாவி எந்தனுக்காகத்தான்?

3.         மகா யேசுவினடியார்க்கு
            மேல் வீடொன்றிருக்கிறதாம்;
            ஆனா லேழைப்பாவி எனக்கு
            அங்கோர் பங்கு இருக்கிறதா?

4.         தேவே! இந்த என் விண்ணப்பத்தை
            அன்பாக நீர் ஏற்றுக்கொண்டு,
            உமதாவியா லிவை யெல்லாம்
            என் பங்கென்று காட்டிடுவேன்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...