28 February 2025

பரிசுத்த ஆவியே வாரும்

பரிசுத்த ஆவியே வாரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பரிசுத்த ஆவியே வாரும்

                        உந்தன் ஆவியால் நிரப்பிடுமே

                        பரிசுத்த ஜீவியமாய் மாற

                        என்னை பரிசுத்தப்படுத்திடுமே

 

1.         ஜீவன் உள்ள ஆவியே வாரும்

            ஜீவ ஆவியால் நிரப்பிடும்

            ஜீவன் உள்ளவனாய் என்னை மாற்றி

            ஜீவன் பெற கிருபை செய்யும்

 

2.         ஞானத்தின் ஆவியே வாரும்

            ஞான ஆவியினால் நிரப்பிடும்

            ஆத்தும ஆதாயம் செய்ய

            ஞான ஆவியினால் நிரப்பிடுமே

 

3.         சத்தியத்தின் ஆவியே வாரும்

            சத்திய ஆவியினால் நிரப்பிடும்

            அக்கினியாய் என்னை இன்று மாற்றி

            சத்தியத்தில் நடத்திடுமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

                        கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே - 2

1.         தேற்றிடும் தெய்வமே

            திடம் தருபவரே - 2

            ஊற்றுத் தண்ணீரே - 2

            உள்ளத்தின் ஆறதலே - எங்கள்

            உள்ளத்தின் ஆறதலே - பரிசுத்த ஆவியே

2.         பயங்கள் நீக்கிவிட்டீர்

            பாவங்கள் போக்கிவிட்டீர் - 2

            ஜெயமே உம் வரவால் - 2

            ஜெபமே உம் தயவால் - தினம்
            ஜெபமே உம் தயவால் - பரிசுத்த ஆவியே

3.         அபிஷேக நாதரே

            அச்சாரமானவரே - 2

            மீட்பின் நாளுக்கென்று - 2

            முத்திரையானவரே - எங்கள்
            முத்திரையானவரே - பரிசுத்த ஆவியே

4.         விடுதலை தருபவரே

            விண்ணப்பம் செய்பவரே - 2

            சாட்சியாய் நிறுத்துகிறீர் - 2

            சத்தியம் போதிக்கிறீர் - தினம்

            சத்தியம் போதிக்கிறீர் - பரிசுத்த ஆவியே

5.         அயல்மொழி பேசுகிறோம்

            அதிசயம் காண்கிறோம் - 2

            வரங்கள் பெறுகிறோம் - 2

            வளமாய் வாழ்கிறோம் - நாங்கள்
            வளமாய் வாழ்கிறோம் - பரிசுத்த ஆவியே

6.         சத்துரு வரும் போது

            எதிராய் கொடி பிடிப்பீர் - 2

            எக்காளம் ஊதுகிறோம் - 2

            எதிரியை வென்று விட்டோம் - நாங்கள்

            எதிரியை வென்று விட்டோம் - பரிசுத்த ஆவியே

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...