28 November 2024

வழியாய் ஒளியாய் மகிபன் பிறந்தார்

வழியாய் ஒளியாய் மகிபன் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வழியாய் ஒளியாய் மகிபன் பிறந்தார்

            மகிழ் கொண்டாடுவோம்

            இருளின் வலிமை ஒழிக்க பிறந்தார்

            வாரும் பண் பாடுவோம் - 2

 

                        விந்தை இங்கு விந்தை இங்கு

                        இறைவன் மனுவாய் பிறந்தது - 2

                        மகிழ்ந்து பாடுவோம், மகிழ்கொண்டாடுவோம் - 2 - வழியாய்

 

1.         ஏசாயா சொன்ன வாக்கிதுவே

            ஈசாயின் வேரில் தோன்றினாரே

            இயேசென்னும் இனிய நாமமிதே

            இரட்சிப்பை ஈவாய் ஈந்திடவே - 2

            தாழ்மையாக தாரணியில் தாவீதின் மைந்தன் பிறந்தாரே - 2 - வழியாய்

 

2.         பாவத்தின் சாபத்தின் ரூபங்களை

            பாரிலே முற்றிலும் அகற்றிட

            உன்னத தேவனாய் பிறந்தாரே

            மகிமை மகிமை மகிமையே - 2

            பூமியிலே சமாதானம் எல்லா சனத்திற்கும் சந்தோசமே - 2 - வழியாய்

 

 

- Nellai Selvin

 

 

https://www.youtube.com/watch?v=hcvhKEuoEbE

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

27 November 2024

ஆதியில் வார்த்தையாக இருந்த தேவனே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆதியில் வார்த்தையாக இருந்த தேவனே

            மாம்சமாகி குமாரனாய் உலகில் வந்தாரே - 2

            பிதாவின் ஏகசுதனான மைந்தனே

            மண்ணோரை மீட்டிவே அவதரித்தாரே - 2

 

                        பாடிக் கொண்டாடுவோம் போற்றி ஆர்ப்பரிப்போம்

                        இம்மானுவேலனை பணிந்திடுவோம் - 2

 

1.         இம்மானுவேலன் தேவன் நம்மோடு

            இல்லையே இன்னல் அவர் வாழ்வில் வந்ததால்

            தீர்ந்ததே தொல்லை இனி கவலையே இல்லை

                        என் வாழ்வில் மீட்பர் இயேசு வந்ததால் - (2) - பாடி

 

2.         தேவன் நம் மீது அன்பை காட்டிட

            தந்தாரே தம் குமாரனை பலியாக

            பாவம் போக்கும் பரிகாரியான இயேசுவே

                        வந்துதித்தாரே பூவில் மனுவுருவாக - (2) - பாடி                     

 

 

- Pr. Solomon Robert

26 November 2024

சாரோனின் ரோஜாவே பாட வந்தோம்

சாரோனின் ரோஜாவே பாட வந்தோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   சாரோனின் ரோஜாவே பாட வந்தோம்

                        சாலேமின் ராஜாவே தாலேலோ - 2

                        இவர் புனித புயலாக புவியில் பிறந்தார்

                        இவர் மழலை மொழி கேட்க மகிழ்ந்து விரைந்தார் - 2

                        மண்ணிலே இயேசு பாலனே

                        மேய்ப்பர் வேந்தர் பாருமே - சாரோனின்

 

1.         புவியிலே பனிமலரே பள்ளத்தாக்கின் லீலியே

            பிறந்ததாலே இவ்வுலகே சிறந்தோங்கிற்றே - 2

            இதோ இதோ இவர்தான் நேசக்குமாரன்

            மண்ணிலே உதித்தாரே தேவராஜனே - 2 - சாரோனின்

 

2.         கனிவான விழியாலே கிருபையாய்ப் பார்த்தீரே

            அடிமை எந்தன் தாழ்மையிலே நோக்கி பார்த்தீரே - 2

            இதோ இதோ இவர்தான் தாழப் பிறந்தார்

            தாழ்ந்தோரை மீட்கவே இங்கே வந்தீரே - 2 - சாரோனின்

 

 

- Suresh Frederick

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...