31 October 2024

நேசக்கரம் நீட்டும் இயேசுவே

நேசக்கரம் நீட்டும் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    நேசக்கரம் நீட்டும் இயேசுவே

                        நேசிக்கிறேன் நான் உம்மையே

                        பாசக் கரம் காட்டும் பரிசுத்தரே

                        பாவியான என்னையும் நேசித்தீரே - 2  - நேசக்கரம்

 

1.         தேகங்கள் முழுவதும் தேளாகக் குத்துதே

            தேனீக்கள் போலவே பாவங்கள் சூழ்ந்ததால் - 2

            தேடி வந்தபோதெல்லாம் தள்ளி தள்ளி நின்றேனே

            தேடி வந்து நிற்கிறேன் உம் பாதம் அருகிலே

            உம்மையன்றி எனக்கு யாருமில்லை

            உம்மைத்தவிர வேறே வழியுமில்லை - நேசக்கரம்

 

2.         உறவுகள் உதறுதே உள்ளமும் பதறுதே

            உன்னத தேவனே உம் அன்பு போதுமே - 2

            உதவாத என்னிடம் உறவாக வந்தீரே

            உயிரையும் கொடுத்து நீர் என்னையும் மீட்டீரே

            உமதண்டை சேர்ந்ததே நான் செய்த பாக்கியம் - (2) - நேசக்கரம்

 

3.         வருடங்கள் போகுதே வருகையும் நெருங்குதே

            வருந்தி என்னை அழைக்கின்றார் வந்திடுவேன் நான் - 2

            வாழ்நாள் முழுவதும் தந்திடுவேன்

            வாழ்க்கை முழுவதும் கொடுத்திடுவேன்

            தருகிறேன் என்னை தந்திடுவேன்

            தந்துவிட்டேன் நான் என்னையே - நேசக்கரம்

 

 

- Nazareth Kennedy

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

பாதம் அமர்ந்து நான்

பாதம் அமர்ந்து நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பாதம் அமர்ந்து நான்

            வேதம் தியானிப்பேன்

            முழங்கால் முடங்கி நான்

            உம் ஜெபம் செய்கிறேன் - 2

 

                        தாரும் வசனத்தை ஊற்றும் வல்லமை

 

1.         தானியேல் போல நான்

            அனுதின ஜெபம் செய்வேன் - 2

            யோசேப்பு போல நான்

            பரிசுத்தமாய் வாழ்வேன் - 2 - தாரும்

 

2.         யாக்கோபு போல நான்

            போராடி ஜெபம் செய்வேன் - 2

            ஈசாக்கு போல நான்

            வசனம் தியானிப்பேன் - 2 - தாரும்

 

 

- BRO. G. CHELLAIAH

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...