பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்


பல்லவி

                   பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
                        பாரினில் பலியாக மாண்டாரே

அனுபல்லவி

                        பரிசுத்தரே பாவமானாரே
                        பாரமான சிலுவை சுமந்தவரே

சரணங்கள்

1.         காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
            காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
            கொலை செய்யவே கொண்டு போனாரே
            கொல் கொதா மலைக்கு இயேசுவை                 - பாவிக்கு

2.         கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
            குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
            பரிகாசமும் பசி தாகமும்
            படுகாயமும் அடைந்தாரே                                - பாவிக்கு

3.         கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
            கிரீடம் முள்களில் பின்னி சூடிட
            இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
            இதைக் காணும் உள்ளம் தாங்குமோ                - பாவிக்கு

4.         உலகத்தின் இரட்சகர் இயேசுவே
            உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
            தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்
            தளராமல் நம்பி ஓடி வா                                    - பாவிக்கு

5.         பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
            பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்
            கண்டு நீ மனம் கலங்குவதேன்
            கர்த்தன் இயேசுவண்டை ஓடிவா                      - பாவிக்கு

6.         வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
            வாருங்கள் என்னண்டையில் என்கிறார்
            இளைப்பாறுதல் தரும் இயேசுவை
            இன்று தேடி நாடி நம்பி வா                              - பாவிக்கு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு