வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்


பல்லவி

                   வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்
                        நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோ

அனுபல்லவி

            பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
            வாவென்று உன்னை அழைக்கிறாரே

சரணங்கள்

1.         ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணி
            ஆதரை மீதினில் அலைந்திடுவாயே
            காணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்
            கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார்                       - வாச

2.         அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணி
            தற்பரன் தயவை தள்ளிடலாமா?
            நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
            நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்?                                 - வாச

3.         பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்து
            மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்
            பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்
            ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ                                    - வாச

4.         மனம் மாறி மறுபடி பிறந்திடாயாகில்
            மகிபரின் இராஜ்ஜியம் காணக் கூடுமோ
            பிறந்தாலோ ஜலத்தாலும் ஆவியாலும் மெய்யாய்
            பிரவேசிப்பாய் தேவ இராஜ்ஜியத்தில்                            - வாச

5.         வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
            வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு
            இயேசுவல்லால் வேறு இரட்சிப்பு இல்லையே
            இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ                         - வாச

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு