எத்தனை நாட்கள் செல்லும்


பல்லவி

                   எத்தனை நாட்கள் செல்லும்
                        இயேசுவின் சுவிசேஷம்
                        அத்தனை நாட்டவரும் அறிய
                        எத்தனை நாட்கள் செல்லும்

சரணங்கள்

1.         ஆடுகள் ஏராளம் அலைந்து திரிந்திடுதே
            தேடுவோர் யாவருக்கும் - என் பெலன் தாராளம் - எத்தனை

2.         சாத்தானின் சக்திகளும் - பெருகிடும் நாட்களில்
            தேவனின் பிள்ளைகளுக்குள் - ஒரு மனம் என்று வரும் - எத்தனை

3.         தேவைகள் நிறைந்து நிற்க - வாய்ப்புகள் நழுவிச் செல்ல
            தாழ்மையாய் ஊழியர்கள் இணைவது என்று வரும்? - எத்தனை

4.         கோபங்கள் சீற்றங்களும் - பொறாமையும் பிரிவுகளும்
            ஊழியர் என்று சொல்வார் - நடுவினில் நின்றகலும் - எத்தனை

5.         உண்மையாம் கோதுமைகள் - மணியாக மண்ணடியில்
            மறைந்திடும் நாள் வருமா - நாம் உடைபடும் நாள்வருமா - எத்தனை

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே