தத்தமாய்த் தந்தேன் என்னையே


பல்லவி

                   தத்தமாய்த் தந்தேன் என்னையே
                        நித்தமும் உந்தனின் சேவைக்கே

சரணங்கள்

1.         துட்டனாய் அலைந்த பாவி நானே
            கட்டளை யாவையும் மீறினேனே
            பட்டமா பாடுகள் போதுமென்றே
            கிட்டி உம் பாதமே வந்து நின்றே          - தத்தமாய்

2.         எந்தனின் உள்ளத்தில் ஆட்சி செய்வீர்
            சிந்தின ரத்தத்தால் சுத்தம் செய்வீர்
            எந்த இடத்திலும் எந்நேரமும்
            உந்தனின் சாட்சியாய் நின்றிடவே        - தத்தமாய்

3.         நீர் தந்த வேலையை நித்தமும் நான்
            நேர்மையாகச் செய்திட சக்தி ஈவீர்
            ஏழ்மையில் ஏங்கிடும் மாந்தருக்கு
            தாழ்மையாய்த் தொண்டு நான் செய்திடவே       - தத்தமாய்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு