நிலையில்லா உலகத்தில்


பல்லவி

                   நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா
                        நினைத்தென்னை அழைத்தீரோ எனதேசையா

சரணங்கள்

1.         மறந்தும்மை மறுதலித் தடங்காமலே
            மனம் போன வழிகளில் நடந்தேனையா
            மடிந்திடும் என்னைக் கண்டு விரைந்தென்னருகில் வந்து
            மனதுருகினீரே ஐயா - என் மேல்          

2.         சிறந்த உம் முகம் காண விரைந்தாசித்தேன்
            சிலுவையின் தரிசனம் அளித்தீரையா
            இனிய உன் சத்தம் கேட்டேன் கொடிய என் குணம் விட்டேன்
            இனிமேல் என் துணை நீரையா - பூவில்

3.         உமக்காக என்னையும் நீர் தெரிந்தெடுத்தீர்
            உமதாவி என்னிலிருந்து பெலனளித்தீர்
            உமையன்றி பூவில் வேறு அடைக்கலம் எனக்கில்லை
            உம்மை நம்பி ஜீவிப்பேனையா - இனி

4.         அதி சீக்கிரமாய் நீங்கும் உபத்திரவம்
            அதிக நித்திய கன மகிமை தரும்
            பலவித இன்னல் கண்டும் சிலவேளை சிட்சை வந்தும்
            பதறாமல் பொறுப்பேனையா - இன்னும்

5.         உடுக்க உடையும் உண்ண உணவும் தந்தீர்
            இடுக்கமான உம் பாதை எமக்களித்தீர்
            விசுவாசப் பிரயாணத்தை தொடங்கின தினமுதல்
            விசுவாசம் பெருகுதையா - என்னில்

6.         இருண்ட கெத்சமனேயில் ஒளி தோன்றுதே
            இனிய இயேசையா உந்தன் திருமுகமோ
            எனக்குந்தன் அனுபவம் அளித்திட திரும்பவும்
            தினம் ஜெபம் செய்கின்றேனையா - தேவா

7.         எனது மரணமோ உம் வருகை நாளோ
            எது முன்பு என்னை வந்து அழைத்திடுமோ
            கடைசி முடிவு நாளில் மறவாதீர் என்னை நாதா
            கனிவாய் வேண்டுகின்றேனையா - இப்போ

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு