28 June 2018

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு


                   இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
                        அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2)

1.         உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
            ஏழை இல்லை பணக்காரனில்லை
            இராஜாதி இராஜா இயேசு
            என்றென்றும் ஆண்டிடுவார்                   - இயேசுவின்

2.         பாவமில்லை அங்கு சாபமில்லை
            வியாதியில்லை கடும் பசியுமில்லை
            இராஜாதி இராஜா இயேசு
            என்றென்றும் காத்திடுவார்                     - இயேசுவின்

3.         இன்பம் உண்டு சமாதானம் உண்டு
            வெற்றி உண்டு துதி பாடல் உண்டு
            இராஜாதி இராஜா இயேசு
            என்றென்றும் ஈந்திடுவார்                       - இயேசுவின்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...