ஆச்சரியமே! அதிசயமே


பல்லவி

                   ஆச்சரியமே! அதிசயமே
                        ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தனிடம்

சரணங்கள்

1.         செங்கடல் இரண்டாய்ப் பிரிந்து போக
            சொந்த ஜனங்களைக் கடத்தினாரே
            இஸ்ரவேலின் துதிகளாலே
            ஈன எரிகோ வீழ்ந்ததுவே                                  - ஆச்சரியமே

2.         ஏழு மடங்கு எரி நெருப்பில்
            ஏழை தம் தாசருடன் நடந்தார்
            தானியேலைச் சிங்கக் கெபியில்
            தூதன் துணையால் காத்தனரே                         - ஆச்சரியமே

3.         பனி மழையை நிறுத்தினாரே
            பக்தன் எலியா தன் வாக்கிலே
            யோசுவாவின் வார்த்தையாலே
            யேகும் சூரியன் நின்றதுவே                               - ஆச்சரியமே

4.         மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும்
            மாபெலன் தேவனிடம் அடைந்தான்
            வீழ்த்தினானே கோலியாத்தை
            வீரன் தாவீது கல் எறிந்தே                                - ஆச்சரியமே

5.         நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்
            நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே
            தம்மை நோக்கி வேண்டும் போது
            தாங்கி நம்மை ஆதரிப்பார்                               - ஆச்சரியமே

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே