துதிப்போம் துதிப்போம் சபையோரே


பல்லவி

            துதிப்போம் துதிப்போம் சபையோரே - இந்த
            கன்வென்ஷன் தந்த இயேசுவையே

அனுபல்லவி

            நம் வாழ்நாளில் இதுவே கொண்டாட்டம் - பூவில்
            எங்கும் கிடையாப் பெரும் பாக்கியம் பாடி          - துதி

1.         சுத்தர் பரிசுத்தராவாரே - எங்கும்
            சுத்தமாய் நிற்கும் மெய்ப்பொருளே
            துயராம் தூதர் பாடிப்போற்ற - அவர்
            துதிக்குள்ளே வாசஞ்செய்வதாலே - பாடி          - துதி

2.         புறஜாதியாகவே ஜீவித்தோம் முன்பு
            முறையீனமாகக் கெட்டுப்போனோம்
            திறமாக இயேசு வந்துதித்து தம்
            திரு இரத்தம் சிந்தி உயிர் தந்தார் - பாடி       - துதி

3.         எரிகோவின் கோட்டை விழுந்ததே - இந்த
            துதியாகும் ஆயுதமதினால்
            ஆகா! போற்றிக் களித்துத் துதிப்போமே - தீய
            சாத்தானின் கோட்டைகள் விழவே - பாடி        - துதி

4.         ஆறு இருபதாசாரியர் - துதி
            செய்தார் சாலமொன் ஆலயத்தில்
            தேவன் மகிமையாய் வந்திறங்கினாரே இன்றும்
            மகிமையாய் மத்தியில் வரவே - பாடி                - துதி

5.         முன்னால் நம்மேல் அன்புகூர்ந்து - இந்த
            ஆண்டும் கன்வென்ஷனை நல்கினார்
            ஆண்டுகள்தோறும் இந்த விதமே - அன்பின்
            ஆண்டவர் அருள் செய்யவேண்டியே - பாடி      - துதி

6.         ஏதுமற்ற நரர் நம்மீது - இணை
            ஏதுமில்லா மா அன்பு கொண்டே
            ஏராளமான ஈவுகளை - தேவன்
            தாராளமாய் நல்கினதாலே - பல                       - துதி

7.         இரண்டாம் வருகையும் சமீபம் - பல
            ஆண்டாக எச்சரித்தும் வாறார்
            ஆண்டாம் இதிலே இயேசு வந்தால் - நாமும்
            ஆயத்தமாக இருக்கவே - பாடி                        - துதி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு