ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          ஊற்றப்பட வேண்டுமே, உன்னதத்தின் ஆவி

            உயிர்ப்பிக்க வேண்டும், எம்மை தேவா

            முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை

            பின்மாரியாக இன்று பொழிந்திடுமே - (2)

 

                        எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க

                        ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்

                        நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ

                        அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் - ஊற்றப்பட

 

1.         தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்

            போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே                        - எண்ணெய்

 

2.         ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்

            ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும்                    - எண்ணெய்

 

3.         ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்

            தேவ புத்திரர் என முத்திரை போடும்                            - எண்ணெய்

 

4.         ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்

            சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும்             - எண்ணெய்

 

5.         ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா

            ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே                          - எண்ணெய்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு