19 January 2023

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை

                        எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே

                        உயர்வோ தாழ்வோ எந்நிலையோ

                        எந்தன் தஞ்சம் இயேசுவே

 

1.          மண்ணின் வாழ்வு மாயையாகும்

            மனிதன் காண்பது பொய்யாகும்

            மாறிடா நேசர் இயேசுவே - 2

            மாறாத அன்பு என்றும் போதுமே5

 

2.         அலைகள் மோதி எதிர் வந்தாலும்

            கலங்கிடேனே வாழ்க்கையிலே

            அசையா எந்தன் நம்பிக்கை - 2

            நங்கூரம் எந்தன் இயேசு போதுமே

 

3.         அவரை நோக்கி ஜெபிக்கும் போது

            அருகில் வந்து உதவி செய்வார்

            கைவிடாமல் கருத்துடன் - 2

            காத்தென்னை என்றும் நடத்திடுவார்

 

4.         தேவ பயமே ஜீவ ஊற்று

            மரண கண்ணிக்கு விலக்கிடுமே

            தேவ பாதையில் நடந்திட - 2

            தேவாவியானவர் உதவி செய்வார்

 

5.         முன்னறிந்து அழைத்த தேவன்

            முடிவு வரையும் நடத்திடுவார்

            தேவ சாயலாய் மாறியே

            தேவாதி தேவனை தரிசிப்பேனே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...