உம் சிறகுகள் நிழலில் எந்நாளும்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
உம் சிறகுகள்
நிழலில் எந்நாளும்
என்னை அரவணைத்திடு
இறைவா - (2)
அந்த
இருளிலும்
ஒளி சுடரும்
வெண்
தணலிலும்
மனம் குளிரும்
- (2)
உந்தன்
கண்களின் இமை போல்
எந்நாளும்
என்னை காத்திடு என்
இறைவா - உம் சிறகுகள்
1. பாவங்கள்
சுமையாய்
இருந்தும் உம்
மன்னிப்பில்
பனி போல் கரையும்
கருணையின்
மழையில் நனைந்தால்
உன்
ஆலயம் புனிதம்
அருளும் - உம்
சிறகுகள்
2. வலையினில்
விழுகின்ற
பறவை அன்று
இழந்தது
அழகிய சிறகை
வானதன்
அருள் மழை பொழிந்தே
நீ
வளர்த்திடு
அன்பதன் உறவை
-
உம் சிறகுகள்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment