26 January 2023

எந்தன் இயேசுவே உந்தன் நேசமே

எந்தன் இயேசுவே உந்தன் நேசமே

                    எந்தன் இயேசுவே உந்தன் நேசமே

                        எந்தன் உள்ளம் உருகிடுதே

                        நல்ல பங்கினை நான் அடைந்தேன்

                        திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்

 

1.         அந்த மாது கண்களின் நீரை

            அன்பரே உம் பாதம் ஊற்றினாளே

            என் இதயமே தைலக்குப்பியே

            என்னை நொறுக்கி ஒப்படைத்தேன்

 

2.         நன்றி என்றும் நான் மறவேனே

            நம்பிக்கை கன்மலை என் இறைவா

            எந்தன் துணை நீர் என்னை அறிவீர்

            எந்தன் பாரம் தாங்கிடுவீர்

 

3.         கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர்

            கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர்

            இந்த உதவி என்றும் மறவேன்

            இன்ப துதிகள் ஏறெடுப்பேன்

 

4.         எந்தன் மேன்மை சிலுவையல்லாமல்

            ஏதுமில்லை இந்தப் பாரினிலே

            உந்தனுடனே என்னை அறைந்தேன்

            உந்தன் குருசில் பங்கடைந்தேன்

 

5.         இலக்கை நோக்கி ஓடுகின்றேனே

            இலாபமும் நஷ்டமென்றெண்ணுகின்றேன்

            ஒன்றே மனதில் உண்டு நினைவில்

            சென்றே பரனைக் கண்டிடுவேன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...