எங்கள் மீதிரங்குவீர் ஐயா இரக்கமுறும்

எங்கள் மீதிரங்குவீர் ஐயா இரக்கமுறும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

329. இராகம்: ஆனந்தபைரவி          ரூபக தாளம் (481)

 

பல்லவி

 

          எங்கள் மீதிரங்குவீர் ஐயா; இரக்கமுறும்

          எந்தையே, திருக்கண் பார்; ஐயா

 

அனுபல்லவி

 

          துங்க மிகும் ஏகனே, மெய்ச் சோதியுறும் ஏசுநாதா

            கங்குல்[1] பகல் துன்பம் மிஞ்சிக் கலங்குகிறோம், ஓலம்! ஐயா - எங்கள்

 

சரணங்கள்

 

1.         வாந்திபேதி மல்கல்[2] ஆச்சே; மதிமயங்கி

            வாலிபரும் சாகல் ஆச்சே;

            மாந்தர் மிசைகோபம் ஆச்சோ? மகத்வமிகும்

            வள்ளலே; உன் அன்பும் போச்சோ?

            வேந்தன் மனுவேலே எங்கள் வேண்டுதலைக் கேட்டுத் தயை

            போந்தபடி[3] ஈந்தருளும்; பூரண நல் ஆதிபனே - எங்கள்

 

2.         ஈசனே, உன் தஞ்சம் அன்றியே-எமக்குப் புகல்

            எங்கும் வேறொருவர் இன்றியே,

            நீரச நரர் மீது நன்றியே-நிதம் அளித்த

            நேசம் போயினதோ குன்றியே?

            சாசுவத நாயகா, இத்தாரணியில் கொள்ளை நோயும்

            வீசும்படி செய்ததாலே விம்முகிறோம் கேளும், ஐயா - எங்கள்

 

3.         ஈனர் மன்றாட்டைக் கேள் ஐயா;-இப்போதிரங்கி

            எம்பரா, நோயைத்தீர், ஐயா

            மானிடர் முகம் பார் ஐயா,-மகா நிச்சய

            வாக்கின்படி கண்பார் ஐயா,

            ஞானமுறும், ஏசுதேவா, ஞாலத்தில் வருந்தும் எம்மை

            வானுலகில் சேர்த்து, நிதம் மாட்சியுடன் வாழுதற்காய் - எங்கள்

- ச. யோசேப்பு

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 



[1] இரவு

[2] பெருகுதல்

[3] வேண்டும்-போதுமான

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு