உம் அன்பு எத்தனை பெரியது

உம் அன்பு எத்தனை பெரியது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   உம் அன்பு எத்தனை பெரியது

                        என் நாவு விவரிக்க அரியது

                        அதின் ஆழம் அகலம் அறிந்திட

                        இந்த பூவின் மாந்தர்க்கு ஆகாததே

 

1.          நீர் என்னை நேசித்து தெரிந்தெடுத்தீர்

            அளவற்ற அன்பினால்

            பேர்சொல்லி அழைத்தீர் நீசன் என்னை

            மாபெரும் இரக்கத்தால்

                        நூறு ஆயிரம் துதிகளால்

                        உம்மைப் போற்றுவேன் (2)        - உம்

 

2.         வேண்டுமே கிருபை உம் கிருபை

            மீண்டும் இந்நேரமே

            ஆண்டாண்டு காலமாய் வழி நடத்தும்

            மாறாத உம் அன்பை

                        தூண்டும் எங்களின் உள்ளமே

                        வேண்டும் ஆவியால் (2)            - உம்

                       

3.         வாழ்க்கையின் பாதையில் கதி இல்லையே

            உம் அருள் இல்லாமல்

            ஆழ்கடல் போன்ற உலகினிலே

            திசை காட்டி இயேசுவே

                        கீழ்ப்படிந்து உம் பாதமே

                        அண்டி சேருவேன் (2)              - உம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு