26 January 2023

எங்களைக் கடந்து போகாதீங்க

நிஜீ.கீதங்கள்:884

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

          எங்களைக் கடந்து போகாதீங்க

            தகப்பனே நீங்க கடந்து போனா

            கலங்கிப் போவோம் தகப்பனே

 

                        உங்க கிருபை தான் எங்களை தாங்கணும் - 2

                        உங்க சமூகம் தான் எங்களை நடத்தணும் - 2

 

1.         பகலில் மேக ஸ்தம்பம்

            இரவில் அக்கினி ஸ்தம்பம்

            இஸ்ரவேல் ஜனங்களை

            நடத்தினதல்லவோ

            எங்களை நடத்திடும்

            எங்கள் அன்பு தெய்வமே

            இப்போது வழி நடத்த வாரும் என் ராஜனே

 

2.         நண்பர் என்னை மறந்திடலாம்

            நம்பினோரும் கைவிடலாம்

            பெற்றோரும் வெறுத்திடலாம்

            உற்றாரும் என்னை துரத்திடலாம்

            நம்பிக்கையின் நங்கூரமே

            ஆபத்தில் என் கேடகமே

            அரணாண கோட்டையும் நீர்

            காத்திடும் என் துருகமும் நீர்

 

3.         எத்தனையோ நிந்தனைகள்

            தாங்கொண்ணா அவமொழிகள்

            பக்தன் எந்தன் பாதையை

            பதற வைத்த படு குழிகள்

            அத்தனையும் தாங்கிடுவேன்

            அப்பா நீர் என்னோடிருந்தால்

            தேற்றரவாளனே தேற்றிட வாருமையா

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...