26 January 2023

எந்தன் அடைக்கலமே இயேசு நாதா

எந்தன் அடைக்கலமே இயேசு நாதா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

1.       எந்தன் அடைக்கலமே இயேசு நாதா

            ஏழைக் கூக்குரல் கேட்டிடும் தேவா

            உம்மை அண்டிவந்தேன் இயேசு நாதா

            என்னைத் தேற்றிடுமே இயேசு தேவா                - எந்தன்

 

2.         கண்ணீரை எந்தன் உணவாக்கினேன்

            ஜீவ தண்ணீரால் எந்தன் பசி நீக்குமே (2)

            பரிகாசம் நிந்தை அவமானங்கள்

            பழி நீக்கி எந்தன் பிணி நீக்குமே (2)                - எந்தன்

 

3.         வறுமையினால் ஏழை வாடுகின்றேன்

            தேவ கிருபையினால் வழி காட்டிடுமே (2)

            வாலாக்காமல் என்னைத் தலையாக்குமே

            கீழாக்காமல் என்னை மேலாக்குமே (2)             - எந்தன்

 

4.         நெரிந்த நாணலை ஐயா முறியாமலும்

            மங்கி எரிகின்ற திரியை அணையாமலும் (2)

            எதிராளியோடு வழக்காடுவீர்

            எளியவன் என் நியாயத்தை எடுத்துரைப்பீர் (2) - எந்தன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...