எத்தனை எத்தனை நன்மை செய்தார் பாருங்க

எத்தனை எத்தனை நன்மை செய்தார் பாருங்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          எத்தனை எத்தனை நன்மை செய்தார் பாருங்க

            நம்ம இயேசு சுவாமி போல இங்கு யாருங்க

            கோடி கோடியாய் நன்றி சொல்லி பாடுங்க

            அவர் கோயில் முன்னே ஒன்றாய் கூடி வாருங்க

            சேர்ந்து ஆடுங்க

                        இயேசு சாமி நமக்கு செய்த நன்மையத்தான் நினைச்சி

                        நாளும் பொழுதும் பாடிடுவோம் உண்மையான புகழ்ச்சி

 

1.         உள்ளங்கையில் நம்ம பெயரை எழுதி வச்சாரு

            அதை கண்ணில் உள்ள மணியைப் போல காத்து நின்னாரு

            நாம போகும் பாதையெல்லாம் முன்னே போவாரு

            பெற்ற தாயினும் மேலாய் மேலாய் அன்பு செய்தாரு         - இயேசு சாமி

 

2.         ஆண்டவனை அப்பானு அழைக்க சொன்னாரு

            அருந்து போன உறவுகளை சேர்த்து வைச்சாரு

            சக்தியான தூய ஆவி நமக்கு தந்தாரு

            சந்தோசமாய் இருக்கச் சொல்லி ஆசி தந்தாரு - நம்மளை

            சந்தோசமாய் இருக்கச் சொல்லி ஆசி தந்தாரு

            நம்ம இயேசு வந்தாரு               - இயேசு சாமி

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு