காலமே தேவனைத் தேடு

காலமே தேவனைத் தேடு ஜீவ

 

 

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

15. இராகம்: மோகனம்                                              ரூபகதாளம்

 

பல்லவி

 

          காலமே தேவனைத் தேடு;-ஜீவ

            காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு.

 

அனுபல்லவி

 

                        சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு;

                        சீரான நித்திய ஜீவனை நாடு. - காலமே

 

சரணங்கள்

 

1.         மன்னுயிர்க்காய் மரித்தாரே,-மனு

            மைந்தனெனப் பெயர் வைத்திருந்தாரே;

            உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு;

            உள்ளங் கனிந்து தனி ஜெபம் பண்ணு. - காலமே

 

2.         பாவச் சோதனைகளை வெல்லு;-கெட்ட

            பாருடல் பேயுடன் போருக்கு நில்லு

            ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்

            சிந்தனை செய்: மனுவேலனைப் பணிய. - காலமே

 

3.         சிறுவர்க ளென்னிடஞ் சேரத்-தடை

            செய்யா திருங்களென்றார் மனதார;

            பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்;

            பாக்கிய மெல்லாம் பரந்து ஜொலிக்கும். - காலமே

 

4.         வேலையுனக்குக் கைகூட,-சத்ய

            வேதன் கிருபை வரத்தை மன்றாட;

            காலை தேடுவோ ரென்னைக் கண்டடைவாரே,

            கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே. - காலமே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு