ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே

ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே-

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

502. இராகம்: சங்கராபரணம்                                     ஆதி தாளம்

 

பல்லவி

                    ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,

                        உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

 

சரணங்கள்

 

1.         முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னப் பாலர் பாடினார்,

            அன்று போல இன்றும் நாமும் அன்பாய்த் துதிபாடுவோம்.

 

2.         சின்ன மறி மீதில் ஏறி, அன்பர் பவனி போனார்

            இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்.

 

3.         பாவமதைப் போக்கவும் இப் பாவியைக் கைதூக்கவும்,

            பாசமுள்ள ஏசையா பவனியாகப் போகிறார்.

 

4.         பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,

            ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்.

 

5.         குருத் தோலை ஞாயிற்றில் நம் குரு பாதம் பணிவோம்,

            கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்.

 

- ஜாண் பால்மர்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு