25 May 2021

தாய் மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல

தாய் மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   தாய் மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல

                        தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்

 

1.         கவலையில்லையே கலக்கம் இல்லையே

            கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் - நான்

            எதைக் குறித்தும் பயமில்லையே

            என் நேசர் நடத்துகிறீர் தினம்

 

2.         செய்த நன்மைகள் நினைக்கின்றேன்

            நன்றியோடு துதிக்கின்றேன் - நான்

            கைவிடாத என் ஆயனே

            கல்வாரி நாயகனே - என்

 

3.         துணையாளரே துணையாளரே

            இணையில்லா மணவாளரே - என்

            உணவாக வந்தீரையா

            உயிரோடு கலந்தீரையா - என்

 

4.         உம்மைத்தானே பற்றிக் கொண்டேன்

            உம் தோளில் அமர்ந்துவிட்டேன் - நான்

            உந்தன் சிறகுகள் நிழல்தனிலே

            உலகத்தையே மறந்துவிட்டேன் - இந்த

 

5.         அதிகாலமே தேடுகிறேன்

            ஆர்வமுடன் நாடுகிநேன் - நான்

            உயிர்வாழும் நாட்களெல்லாம்

            உம்நாமம் சொல்வேனையா - நான்

 

6.         அதிசயமே அதிசயமே

            ஆறுதல் நாயகனே - என்

            ஆலோசனைக் கர்த்தரே - என்

            ஆடைக்கலப் பட்டணமே

 

7.         எபிநேசரே எபிநேசரே

            இதுவரை உதவி செய்தீர்

            எல்ரோயீ எல்எலியோன்

            காண்பவரே உயர்ந்தவரே

 

8.         படுக்கையிலும் நினைக்கின்றேன்

            இராச்சாமம் தியானிக்கின்றேன்

            உம் அன்பு போதுமையா

            உயிரினும் உயர்ந்ததையா - அது

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...