27 May 2021

என்ன கொடுப்பேன் நான் உமக்கு

என்ன கொடுப்பேன் நான் உமக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                    என்ன கொடுப்பேன் நான் உமக்கு

                        என்ன கொடுப்பேனோ?

                        என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ?

                        என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன்?

 

1.         ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ

            நோவாவைப் போல் தகனபலியினையோ

            ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ

            என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன்?

 

2.         ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்

            ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன்

            தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன்

            என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன்?

 

3.         சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட

            பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே

            என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே

            என்னைக் கொடுப்பேன், நான் என்னை கொடுப்பேன்?

 

                        என்னையே நான் தருகின்றேன் (2)

                        என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ?

                        என்னைக் கொடுப்பேன், நான் என்னைக் கொடுப்பேன்?

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...