கேரூபீன்கள் சேராபீன்கள் போற்றிடும்

கேரூபீன்கள் சேராபீன்கள் போற்றிடும்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                    கேரூபீன்கள் சேராபீன்கள்

                        போற்றிடும் தேவ சாயல் கண்டேன் (2)

 

1.         சிங்காசனத்தின் சாயல் கண்டேன்

            மரகதம் போன்ற பிரகாசம் கண்டேன்

            இரத்தினக் கல் போன்ற அழகை கண்டேன்

            யேகோவா தேவனின் வெளிச்சம் கண்டேன்

 

            பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

            சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே

            பரிசுத்தர் அவர் பரிசுத்தரே

 

2.         ஏழு ஆவிகளை அங்கு கண்டேன்

            அக்கினி தீபங்கள் எரியக் கண்டேன்-2

            பளிங்குக் கொப்பான கடலை கண்டேன்

            கண்களால் நிறைந்த ஜீவனைக் கண்டேன்

 

3.         பலிபீடமதில் நெறுப்பைக் கண்டேன்

            சேராபீன்கள் அதை எடுக்கக் கண்டேன்

            பூமியிலே அக்கினி போடக் கண்டேன்

            மனுஷர் மத்தியலே எரியக் கண்டேன்

 

4.         ஆலயம் மேகத்தினால் நிறையக் கண்டேன்

            அக்கினி நதி அங்கு பாயக் கண்டேன்

            கர்த்தரின் மகிமை எங்கும் ஒளிரக் கண்டேன்

            ராஜாதி ராஜன் இயேசு வீற்றிருந்தார்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு