13 May 2021

நெஞ்சம் நிறைந்த புதுமையில்

நெஞ்சம் நிறைந்த புதுமையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நெஞ்சம் நிறைந்த புதுமையில்

                        இன்று பொங்கும் இசை மழை வெள்ளம்

                        இறைவனின் பிள்ளைகள் நாங்கள்

                        காணும் இலட்சிய விடுதலை கனவுகள்

 

                                    கனவுகள் யாவும் நனவுகள் ஆகும்

                                    இனி இந்த பூமி புது யுகம் காணும்

                                    வா வா நண்பா நீயும் நானும்

                                    சேர்ந்து வந்தாலே வாழ்வு நன்றாகும்

 

1.         வான் அமுத மழையில்

            இதயம் நனைகையில் புதிய உறவுகள்

            எனது மனதினில் இனிய நினைவுகள்

            கனிவும் கருணையும் கனியும் இதயமும்

                        நாளும் வாழ்வை அழுத்தும் சுமைகள்

                        மீண்டும் விழிகள் தெளியும் தெளியும்

                        தூவும் புயலை எதிர்த்தே ஜெயித்திடும்

                        புதுமை நமக்கு புரியும் புரியும்

                        வான் மலைகளென நாம் நடந்துவர

                        நான் எனக்கு எனும் சுய நலம் மறைந்திடும்

                        புது யுகம் நீங்காது

 

2.         என் உலகம் முழுதும்

            இனிய இரவுகள் விடியும் அழகினில்

            புதுமை விழியிலும் இனிமை கனவுகள்

            கோலம் எழுதிடும் புதிய உறவுகள்

                        போதும் உலகை மாய்த்திடும் போர்களும்

                        வேதம் வளர்க்கும் மதங்களும் ஜாதியும்

                        யாதும் நமது ஊர் எனும் உலகெனும்

                        வேதம் இங்கு வென்றிட வேண்டும்

                        வான் மலைகளென நாம் நடந்துவர

                        நான் எனக்கு எனும் சுய நலம் மறைந்திடும்

                        புது யுகம் நீங்காது

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...