கொல்கொதா மலைமேல்
1. கொல்கொதா
மலைமேல் தோன்றுதோர்
சிலுவை
அல்லல்
பழிப்பின்
சின்னமதாம்,
நீசப் பாவிகட்காய்
நேசர் மாண்டாரதில்
நேசிப்பேன்
அத்தொல் சிலுவையை
பல்லவி
அந்தச்
சிலுவையை நேசிப்பேன்
பெலன்
ஓய்ந்து நான் சாகும்
வரை
தொல் சிலுவையை
நான் பற்றுவேன்
பின்
அதால் க்ரீடத்தை
அணிவேன்
2. தேவாட்டுக்
குட்டிதம்
மாட்சிமை வெறுத்து
உலகோர் பழித்த குருசை,
கல்வாரி மலைக்கே சுமந்தார்
எனக்காய்
கவர்ந்த
தென்னுள்ளத்
தையது
3. என்
பாவம் மன்னிக்க,
என்னைச் சுத்தமாக்க
நேசர்
மாண்ட சிலுவையதோ
தூய
ரத்தம் தோய்ந்த
அந்தச் சிலுவையின்
அழகெத்தனை
மாட்சிமை பார்!
4. குருசின் இழிவை மகிழ்வாய்
சுமந்தே
மேன்மை
பாராட்டுவேன்
நிந்தையில்,
பின்னால்
மோட்சலோகில்
நேசர் கூட்டிச்
சென்று
பங்களிப்பார்
தம் மகிமையில்.
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment