வானமும் பூமியும் மலைப் பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே
ஆண்டவர் நல்லவர் வல்லவர் - 2
1. சந்திர சூரியன் சகலமும் வணங்குதே
எந்தனின் இதயமும் இன்பத்தால் பொங்குதே
- 2
உந்தனின் கிருபையை எண்ணவும் முடியாதே
தந்தையுமானவர் நல்லவர் வல்லவர் - வானமும்
2. பச்சைக் கம்பள
வயல் பரமனை போற்றுதே
பறவை இனங்களும் பாடித் துதிக்குதே - 2
பக்தரின் உள்ளங்கள்
பரவசம் அடையுதே
பரிசுத்த ஆண்டவர் நல்லவர் வல்லவர் - வானமும்
3. உடல் நலம் பெற்றதால் உள்ளமும் பொங்குதே
கடல் போன்ற காருண்யம் கண்டதால் கொள்ளுதே
- 2
கடலலை இயேசுவின்
பாதம் தழுவுதே
திடமான ஆண்டவர் நல்லவர் வல்லவர் - வானமும்
No comments:
Post a Comment